சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திக்க வாய்ப்பில்லையாம்!
தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.
அமித்ஷா
மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா ,இரவு 9:05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

அதன்பின், 9.45 மணியளவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். நாளை காலை 11.40 மணியளவில் வேளச்சேரியில் தென் சென்னை பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை வருகை
தொடர்ந்து, பகல் 1.45 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார். பகல் 2.45 மணிக்கு பள்ளிகொண்டாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். பின்னர் மாலை 3.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம், சென்னை திரும்பி, 5.50 மணிக்கு தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார்.
இன்று அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் சேலத்திலேயே இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வமும் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.