தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொங்கல் பண்டிகையையொட்டி தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

தை முதல் நாளான இன்று மக்கள் புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு, புத்தாடை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில்,

"அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்" என்று தமிழில் பதிவிட்டு பொங்கல் வாழ்த்தினை கூறியுள்ளார்.  

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்