சவுரவ் கங்குலி வீட்டில் விருந்து சாப்பிட்ட அமித் ஷா - வைரலாகும் புகைப்படம்

Sourav Ganguly Amit Shah
By Swetha Subash May 07, 2022 07:24 AM GMT
Report

மேற்கு வங்கத்திற்கு 2 நாள் சுற்று பயணமாக சென்றுள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி வீட்டில் இரவு உணவு உண்டார்.

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமித் ஷா சென்றார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி வீட்டில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரவு உணவு உண்டார்.

முன்னதாக, விக்டோரியா நினைவிடத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவிலும், யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய பட்டியலில் துர்கா பூஜையை சேர்க்கும் நிகழ்ச்சியிலும் அமித் ஷா கலந்துகொண்டார்.

மேற்கு வங்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, அசாம், தெலுங்கானா, கேரளா, உத்திரகண்ட், அருணாசல பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கடந்தாண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, அமித் ஷா மேற்கு வங்கத்திற்குச் சென்ற முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.