மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்.
சமீபத்தில் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது தனி விமானம் மூலம் நாளை இரவு சென்னை வரும் அமித் ஷா ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் மையத்தில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 24-ம் தேதி ஹெலிகாப்டரில் செல்லும் மத்திய அமைச்சர் 390 காவலர்களுக்கான பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடக்கி வைக்கிறார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அங்கு ரூ.70 கோடி மதிப்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அமித்ஷா அடிக்கல் நாட்டவுள்ளதாகவும் மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார்.
சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! IBC Tamil