ராமேஸ்வரத்தில் மேடையில் தலைவர்களிடம் மன்னிப்பு கேட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

Amit Shah Government Of India
By Thahir Jul 29, 2023 01:39 AM GMT
Report

ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நேற்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து ஊழக்கு எதிரான நடைப்பயணத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார்.

பாஜக நடைப்பயணம்

இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அமித் ஷா வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர்.

Home Minister Amit Shah apologized

பின்னர் விழா மேடைக்கு வந்து சேர்ந்த அமித்ஷாவை அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் நடைப்பயணம் தொடர்பான காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

மன்னிப்பு கேட்ட அமித் ஷா 

தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணிக் கட்சி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

Home Minister Amit Shah apologized

தமிழில் பேச முடியாததற்கும் மன்னியுங்கள். ராமேஸ்வரம் பூமி இந்தியாவின், இந்து மதத்தின் சின்னமாக விளங்குகிறது.

என் மண்; என் மக்கள் நடைப்பயணம் இந்திய நாட்டில் 130 கோடி மக்களின் மனதில் ஒரு மரியாதையை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகின்ற ஒரு நடைப்பயணம்.

இது அரசியல் சார்ந்ததல்ல. தமிழக கலாச்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் நடைப்பயணம். தமிழ்நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்க நடத்தப்படும் நடைப்பயணம்.

ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தைப் பேணும் அரசை உருவாக்கும் நடைப்பயணம். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியைக் கொண்டு செல்லப்போகிறார் அண்ணாமலை'' என்றார்.