அனைத்து விதமான சரும பிரச்சனைக்கும் உடனடி தீர்வு தரும் பேஸ் மாஸ்க்.. எப்படி செய்வது?
நம் எல்லோருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கால சூழ்நிலை நமக்கு பல நேரங்கள் கைகொடுப்பது இல்லை. அதாவது நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது, முகப்பரு, முதுமை, மெலஸ்மா, ஹார்மோன் மாற்றங்கள் காயம் பல்வேறு காரணங்களால் நம்முடைய சருமங்கள் பாதிக்க படுகிறது.
அதனால் முகமானது பளபளப்பு தன்மையை இழந்து காணப்படும். இதை சரி செய்ய சிலர் கடைகளில் இருக்கக்கூடிய ரசாயன பொருட்களை வாங்கி முகத்திற்கு பயன்படுத்துவார்கள். என்ன தான் ரசாயன பொருட்கள் உடனடியாக நல்ல மாற்றங்களை கொடுத்தாலும் காலம் கடந்து ரசாயன பொருள் பயன்படுத்திய பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
அதனால் எந்த ஒரு பாதிப்புகளும் தராத இயற்கையான விஷயங்களை நாம் பின்பற்றும் பொழுது நிச்சயமாக நம்முடைய சருமமும் உடலும் பாதுகாப்பாக இருக்கும். அப்படியாக சரும பிரச்சனைக்கு உடனடி தீர்வு கொடுக்கக்கூடிய ஒன்றுதான் வேப்பிலை கொண்டு தயாரிக்கப்படுகின்ற ஃபேஸ் மாஸ்க்.

உங்களுக்கு வயது காரணங்களால் முகச்சுருக்கம் அல்லது முகத்தில் பரு போன்ற எந்த விஷயங்கள் இருந்தாலும் இந்த ஒரு பேஸ் மாஸ்க் நீங்கள் பயன்படுத்தும் பொழுது நிச்சயம் நல்ல மாற்றங்களை காணலாம்.
அப்படியாக இந்த ஃபேஸ் மாஸ்க் எவ்வாறு தயாரிக்க வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஆயுர்வேதத்தில் எப்பொழுதுமே வேம்புக்கு அதிக அளவில் முக்கியத்துவம் உண்டு. இது சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்புகளை கொண்டுள்ளது. இவை நம்முடைய முகத்தில் வரக்கூடிய முகப்பரு மற்றும் சரும தொற்றுகளை முழுமையாக குறைக்க கூடியது.
அதாவது வேப்பிலையில் இருக்கின்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நம்முடைய முகத்தில் உள்ள சரும செல்களை சேதம் அடையாமல் அவை தடுக்கிறது. அதோடு இது மெலனின் உருவாவதையும் தடுக்கிறது. ஆக, இவ்வளவு நன்மைகளை செய்யக்கூடிய வேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் பேஸ் மாஸ்க் செய்வது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
வேப்ப இலை - ½ கப்
தண்ணீர் - 1 முதல் 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:
எடுத்துக்கொண்ட வேப்பிலை இலையில் தண்ணீரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தயார் செய்த அந்த வேப்பிலை பேஸ்டில் சிறிது மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவ வேண்டும். அதை சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை உலர விட வேண்டும். பின்னர் முகத்தை சாதாரண நீரில் நன்றாக கழுவி விட வேண்டும்.

பயன்கள்:
மிகவும் பயனுள்ள இந்த ஃபேஸ் மாஸ்கை வாரத்திற்கு இரண்டு முறை நாம் தடவி வரும் பொழுது சரும பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் நீங்கள் எளிதாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் விடுபடலாம். அதேபோல் நீங்கள் இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய கருவளையம் மற்றும் சுருக்கங்கள் ஆகியவை படிப்படியாக குறைந்து விடும்.
பின் குறிப்பு:
உணர் திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்களாக இருந்தால் இந்த பேஸ் மாஸ்கை நீங்கள் கழுத்து பகுதியில் ஒரு சிறிய இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி பாருங்கள். எந்த ஒரு எரிச்சல் மற்றும் அலர்ஜி இல்லாத பட்சத்தில் நீங்கள் அதை முகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.