முடி அடர்த்தியாகவும் விரைவாகவும் வளர ஆளி விதை ஹேர் மாஸ்க்.. எப்படி செய்வது?

Hair Growth Life Style
By Sakthi Raj Feb 15, 2026 12:57 PM GMT
Report

எல்லோருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கால சூழ்நிலையால் முடியை பலராலும் பராமரிக்க முடியாத நிலை இருக்கிறது. அந்த வகையில் முடி நீளமாக மற்றும் விரைவாக வளரக்கூடிய ஆளி விதை ஹேர் மாஸ்க் வீட்டிலே செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இந்த ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளது. இவை நம்முடைய உச்சந்தலைக்கு ஊட்டச்சத்துக் கொடுத்து முடியை வலிமையாகவும் அடர்த்தியாகவும் வளர்வதற்கு உதவுகிறது.

முடி அடர்த்தியாகவும் விரைவாகவும் வளர ஆளி விதை ஹேர் மாஸ்க்.. எப்படி செய்வது? | Home Made Flaxseed Gel Hair Mask For Hair Growth

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

செய்முறை:

இதை செய்வதற்கு கால் கப் ஆளி விதை, இரண்டு கப் தண்ணீர் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆளி விதையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

கட்டியான ஜெல் பதம் வரும் வரை அடுப்பில் நாம் வேக வைக்க வேண்டும். பிறகு சுத்தமான துணி அல்லது வடிகட்டி கொண்டு ஜெல்லை மட்டும் வடிகட்டி சுத்தமான பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். பிறகு அதோடு கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். இவை நமக்கு கூடுதல் சத்துக்களை கொடுப்பதோடு, முடி பளபளப்பாக வைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

இந்த ஜெல்லை உச்சந்தலை மற்றும் கூந்தலில் நேரடியாக பயன்படுத்த வேண்டும். ஐந்து நிமிடங்கள் முடிந்த வரை நன்றாக மசாஜ் செய்வது நம்முடைய முடியின் ஊட்டச்சத்தை அவை வலுவாக்கிறது. இந்த ஜெல் கலவையை குறைந்தது முடியில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும்.

இனி வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் தயார்

இனி வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் தயார்

நன்மைகள்:

இந்த ஹேர் மாஸ்கானது நம்முடைய முடியில் சிக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதோடு நம்முடைய முடியை ஆரோக்கியமாக வைப்பதோடு முடிவேர்களை வலுவாக்கி புதிய முடி வளர்வதற்கான வழிவகுக்கிறது. இந்த ஹேர் மாஸ்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் பெறலாம்.