என்ன ஸ்கெட்சா ? - டாம் குரூஸ் காரை திருடிய மர்ம நபர்!

bmwcar tomcruise hollywoodactor
By Irumporai Aug 29, 2021 09:37 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஹாலிவுட்டின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவரது மிக விலைஉயர்ந்த சொகுசு கார் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஷன் இம்பாசிபிள் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் டாம் குரூஸ். தற்போது அதன் 7ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பர்மிங்காம் நகரில் ஹோட்டல் ஒன்றில் நடந்த படப்பிடிப்பின்போது, அவர் தனது விலைஉயர்ந்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றார்.

அப்போது அவரது கார் கடத்தப்பட்டுள்ளது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அந்த காரை  திருடர்கள் ஜி.பி.எஸ் டிராகிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடியுள்ளனர்.

உடனடியாக செய்ல்பட்ட காவல்துறையினர் சில மணி நேரத்தில் காரை மீட்டனர். ஆனாலும் காருக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளார்.

கார் மீட்கப்பட்டாலும், இந்த சம்பவத்தால் டாம் குருஸ் கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.கார் ஸ்டண்ட் செய்வதில் வல்லவரான டாம் குரூஸிடமே கார் திருட்டு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.