‘’ செல்ல மழையே, முத்து மழையே ‘’ : தொடர்மழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

school holidays tamilnadurain
By Irumporai Feb 12, 2022 02:38 AM GMT
Report

கனமழை காரணமாக க நாகை , திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தென் தமிழக மாவட்டங்கள் ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும்  கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

‘’ செல்ல மழையே, முத்து மழையே ‘’  : தொடர்மழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Holidays Schools And Colleges In Thiruvarur Nagai

இந்த நிலையில்  தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு நடைபெறும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி தெரிவித்துள்ளார்.

அதேபோல் கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.