?LIVE திருவாரூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
Government of Tamil Nadu
By Thahir
மாண்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்து வருவதால் நாளை திருவாரூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து திருவாரூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.