கனமழை எதிரொலி; பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்ததெந்த மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழையால் இன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
கனமழை தொடர்வதால் கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் லலிதா.
புதுச்சேரி, மற்றும் கரைக்கால் பகுதியில் உள்ள தனியார், மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.