தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விடுமுறை!

school tamilnadu holiday
By Jon Mar 16, 2021 11:08 AM GMT
Report

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விடுமுறை கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.

இதனையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடைய உள்ளது. இதனையடுத்து 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட ஆல்பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விடுமுறை! | Holiday Schools Tamilnadu April

இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி கொண்டு இருப்பதால் மார்ச் 22ம் தேதி முதல் பிளஸ்-2 தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தேர்தலுக்காக வாக்கு சாவடிகளை தயார் செய்ய உள்ளதால் ஏப்ரல் 1 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.