கனமழை எதிரொலி ; 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Tamil nadu Chennai
By Thahir Nov 02, 2022 03:43 AM GMT
Report

கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

எந்ததெந்த மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

* சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

Heavy rain echoes; Holiday only for schools in 7 districts

* ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை.

* திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

* வேலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டுமு் பள்ளிகளுக்கு விடுமுறை.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (2.11.2022) ஒரு நாள் விடுமுறை முறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவு.

* திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி இன்று (02.11.2022) ஒரு நாள் மட்டும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மட்டும் பள்ளிக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவிப்பு.

* கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் ராகுல் அறிவிப்பு.

* விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.