தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

Diwali
By Yashini Oct 28, 2026 12:27 PM GMT
Report

Holiday on the day after diwali tn gov announces- தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 9ஆம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு விடுமுறை

இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதனால், சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக நவம்பர் 9ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு | Holiday On The Day After Diwali Tn Gov Announces

இதனை ஏற்று, நவம்பர் 9ஆம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாகச் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.