நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... குவிந்த மதுப்பிரியர்கள் கூட்டம்...
நாளை டாஸ்மாக் கடை விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் இன்று மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
மே 1 ஆம் தேதியான நாளை உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும், அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் திறந்தது முதலே மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் அன்றைய தினம் மதுபானம் கடத்துதல், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேற்படி இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1) மற்றும் F.L-2/F.L-3/F.L-3A/FL-3AA மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 -ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.