இன்று திருவாரூரில் விடுமுறை : மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமலையின் எதிரொலியால் இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் கனமழையினால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது . மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.