கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
செங்கல்பட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அதிகாலை முதலே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.