சென்னையில் நாளை காலையில் ஹோட்டல்கள் இயங்காது - என்ன காரணம்?
By Petchi Avudaiappan
சென்னையில் நாளை (மே 5) காலை மட்டும் ஹோட்டல்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மே 5 ஆம் தேதி தமிழகத்தில் வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வணிகர்களின் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சமையல் எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம் குறித்தும், விலை குறைப்பு குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னையில் காலையில் மட்டும் ஹோட்டல்களுக்கு விடுமுறை விடப்படுவதாக சென்னை ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.