தத்தளிக்கும் குடியிருப்புகள் - 4 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை!

Kanchipuram Government of Tamil Nadu Chennai Chengalpattu Thiruvallur
By Thahir Dec 05, 2023 08:37 AM GMT
Report

மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்புகள் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை(டிச.6) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொட்டி தீர்த்த கனமழை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரவலாக 48 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதனால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி சாலைகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தத்தளிக்கும் குடியிருப்புகள் - 4 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை! | Holiday For 4 District Schools And Colleges

மழை சற்றே ஓய்ந்துள்ள போதும், அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே மிக்ஜாம் புயல் காரணமாக, டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளான நேற்றும், இன்றும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.

பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் ரயில் போக்குவரத்து மற்றும் பேருந்து போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்பட்டிருந்தது.

மழை வெள்ள சேத விவரங்களை கணக்கெடுத்து வரும் அரசு அதிகாரிகள், தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தத்தளிக்கும் குடியிருப்புகள் - 4 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை! | Holiday For 4 District Schools And Colleges

இருப்பினும் பல இடங்களில் தேங்கிய மழை நீர் செல்ல வழியின்றி உள்ள நிலை நீடிக்கிறது. இதையடுத்து நாளை (06.12.2023) அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.