தமிழகத்தில் அதிகரிக்கும் கன மழை : கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

By Irumporai Aug 02, 2022 03:06 AM GMT
Report

தென்மேற்கு பருவமழை தீவிரமடையத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை  பெய்து வருகிறது.

தமிழகத்தில் கனமழை

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கமனழை பெய்யக்கூடும் என என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கன மழை :  கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Holiday Declared In Kanniyakumari District Schools

ஆகவே  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும்.

தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை வெளியிட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார்.