கனமழையால் 4 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Tamil nadu
By Thahir Sep 01, 2022 05:02 AM GMT
Report

கனமழையால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழையால் 4 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | Holiday Anouncement 4 District Schools Colleges

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாட்டங்களில் இன்று கனமழை பெய்து வருவதால் மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.