உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாது - கிளென் மேக்ஸ்வெல்
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடுமையாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து ட்தெரிவித்துள்ள மேக்ஸ்வெல் : டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்கள். போட்டியின் திசையை எந்த நேரத்திலும் மாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக இருப்பதால் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதானதல்ல எனக் கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் அமீரகத்தில் நடப்பதால் உலகக் கோப்பைக்கு தயாராவது சற்று எளிதாகவே இருக்கும். அமீரகத்தின் தட்பவெப்ப நிலை, ஆடுகளங்களின் தன்மை ஆகியவை ஆஸி வீரர்களுக்கு பழகிவிடும்.
அதனால் எதிரணியின் பந்துவீச்சாளர்களை ஆஸி பேட்ஸ்மேன்கள் ஒரு கை பார்ப்பார்கள். அதேபோல பவுலர்களும் பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க தயாராக இருக்கிறார்கள். அதேவேளையில் இந்தப் போட்டியில் எந்த அணியையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை " என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் மேக்ஸ்வெல்.