20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுப்பு : அண்ணாமலை குற்றச்சாட்டு

DMK BJP K. Annamalai
By Irumporai Aug 12, 2022 10:25 PM GMT
Report

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சமூக நீதி காவலர்

ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுப்பு  : அண்ணாமலை குற்றச்சாட்டு | Hoist The National Flag Annamalai Allegation

ஆனால் இங்கோ, சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத் தாமே சமூகநீதி காவலர் என்ற பட்டங்களைச் சூட்டிக் கொள்வதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர் திமுக தலைவர்கள்.

கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு

சமீபத்தில் சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி, சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தது.

இங்கு அமர்ந்து கொண்டு உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது பீகாரில் என்ன நடக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர், தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள்.

24 மாவட்டங்களில் ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும்.

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதைச் சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர தெரிவித்துள்ளார்.