வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது.. - பரபரப்பு சம்பவம்...!

India
By Nandhini Feb 21, 2023 09:02 AM GMT
Report

டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

நேற்று ரயில்வே அதிகாரிகளுக்கு ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலில் டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, உடனடியாக ரயில்வே அதிகாரிகள் ராஜஸ்தானின் தோல்பூர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீஸ் படை (ஆர்பிஎஃப்) மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் வெடிகுண்டை கண்டுபிடிக்க, மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் இருந்து நாய் மற்றும் வெடிகுண்டு படையும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாயுடன் ரயிலை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இதனால், ரயில் கிளம்ப பல மணி நேரம் தாமதமானது.

இதனையடுத்து, டெல்லி-சென்னை கரிப் ரத் விரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர், ரயிலின் ஜி-2 பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி இந்த புரளி அழைப்பு விடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, புலனாய்வு போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 4 பேரை கைது செய்துள்ளனர். 

hoax-bomb-threat-delhi-chennai-4-people-arrested