வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
நடிகர் வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இளம் நடிகை ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, புகழ், சிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜியின் படத்திலும், விஜய் சேதுபதி படத்திலும் ஷிவானி பிசியாக நடித்து வரும் நிலையில் வடிவேலு படத்தில் இணைந்துள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil