‘ ‘ இந்திய வீரர்களை பந்துகளால் தாக்கியதே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம்’’-மைக்கல் வாகன் கோபம்!
டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களை பந்துகளால் தாக்கியதே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கல் வாகன் சாடியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, வெல்லும் நிலையில் இருந்தது.
209 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது இந்திய அணியின் முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா களத்தில் இருந்து அதிவேகத்தில் பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்கள் வீசி திணறடித்தார்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் பும்ரா பேட்டிங் செய்யும் போது ஆண்டர்சன், ராபின்சன், ரூட் ஆகியோர் பவுன்சர்கள் மற்றும் தலையை தாக்கும் விதத்தில் பந்துக்களை வீசினர்.
இந்த செயல் தான் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் வாகன் தெரிவித்துள்ளார்.
மேலும், பும்ரா மற்றும் சமியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் நோக்கத்தை கைவிட்டு, அவர்களை தாக்கும் நோக்கில் இங்கிலாந்து கேப்டன் ரூட் செயல்பட்டதே தோல்விக்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இப்படி நிதானம் இழந்து பந்து வீசும்போது, எதிரில் இருந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் ஏன் கேப்டனை கண்டிக்கவில்லை என வாகன் கேள்வி எழுப்பியுள்ளார்