‘Hitman is back...’ 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்த ரோகித் சர்மா - டுவிட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்....!
3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்த ரோகித் சர்மா
நியூசிலாந்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர்.
முதல் பந்திலிருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். நியூசிலாந்தின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டு தெறிக்க விட்டனர்.‘
டுவிட்டரில் ட்ரெண்டாகும் ரசிகர்களின் வீடியோ
இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 118 ஸ்டிரைக் ரேட்டில் 85 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தனது 3 வருட சத வறட்சியை அற்புதமான முறையில் முடித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக பயங்கரமான விமர்சனங்களை ரோகித் சர்மா எதிர்கொண்டு வந்தார். இருந்தாலும், சர்மா தன் மீது வைக்கும் விமர்சகர்களை ஒரு தலைசிறந்த நடிப்பால் வாயடைத்தார்.
இன்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் 41 பந்துகளில் அரை சதம் எட்டினார், அடுத்து 50 ரன்களில் 42 பந்துகளில் வந்தார். ரோஹித் ஷர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது 30வது சதமாகும்.
ரிக்கி பாண்டிங் இதற்கு முன்பு 375 ஒரு நாள் போட்டிகளில் 30 சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்தார், ஆனால் ரோஹித் தற்போது தனது 241வது போட்டியில் அவரை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்த ரோகித் சர்மாவை அவரது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
???????! ?
— BCCI (@BCCI) January 24, 2023
Talk about leading from the front! ??
A magnificent century from #TeamIndia captain @ImRo45 ?
Follow the match ▶️ https://t.co/ojTz5RqWZf…#INDvNZ | @mastercardindia pic.twitter.com/iR3IJH3TdB
And .......
— ????? ????? ???????? RSR (@Ruchisingh4599) January 24, 2023
The Wait is Over
A Magnificent ODI Century from #HITMAN after a long wait ??????#RohitSharma?#RohitSharma @ImRo45#shubhmangill #ViratKohli? #indiancricket #IndvsNZ3rdODI pic.twitter.com/vQYQRRjGN7
I'm Happy ?
— ✨ JOHNNY DEPP $ HITMAN ✨? (@J_A_I_ROHITIANS) January 24, 2023
Finally My Idol Rohit Sharma Hits A Century @ImRo45 #RohitSharma? #RohitSharma #INDvNZ pic.twitter.com/nqPiDtGMPb
#RohitSharma?
— jayabrat pradhan joy (@pradhan_Joy_07) January 24, 2023
He is Back!! pic.twitter.com/36XTdk72ke