2024 நாடாளுமன்றத் தேர்தல்: 'ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்' - அமைச்சர் உதயநிதி பேச்சு!

Udhayanidhi Stalin Tamil nadu DMK Salem
By Jiyath Jan 21, 2024 04:00 PM GMT
Report

'ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்' என்று திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 

இளைஞரணி மாநாடு 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநாடு நடைபெற்று வருகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்:

இந்த மாநாட்டில் ஆளுநர் பதவி நீக்கம், நீட் தேர்வு ரத்து உட்பட 25 தீர்மானங்கள் திமுக இளைஞர் அணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ஆட்சி மாற்றம் 

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும்,

2024 நாடாளுமன்றத் தேர்தல்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, 'ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்' என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், திமுக இளைஞரணி மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் என சூளுரைக்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறினார்.