வரலாற்றில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4ம் நாளாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொருத்து, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து நிர்ணயித்து வருகின்றன.
இம்மாத தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 26 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.90.70ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 34 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.