இங்கிலாந்து ராணியின் சவப்பெட்டி மீது போர்த்தப்பட்ட கொடியில் இவ்வளவு அர்த்தம் இருக்கா.?

Queen Elizabeth II Death
By Irumporai Sep 19, 2022 05:46 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது.

ராணி எலிசபெத் உடல் அடக்கம்

இந்த நிலையில் , ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இங்கிலாந்து ராணியின் சவப்பெட்டி மீது போர்த்தப்பட்ட கொடியில் இவ்வளவு அர்த்தம் இருக்கா.? | History Of The Flag Covering Queen Elizabeth

இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்படும் உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே சமயம் , பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு அவருடைய சவப்பட்டியில் வித்தியாசமான கொடி போர்த்தப்பட்டுள்ளது.

சவப்பெட்டியில் உள்ள கொடி

  இந்த கொடியை ராயல் ஸ்டாண்டார்ட் என்று அழைக்கிறார்கள். அரச குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கொடி இருக்கிறது. ஒவ்வொன்றும் வித்தியாசமான முறையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை.

ராணியின் சவப்பெட்டியில் போர்த்தப்பட்டுள்ள இந்த கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறங்களுடன் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் நான்காம் பகுதி இங்கிலாந்தையும், இரண்டாவது ஸ்காட்லாந்த்தையும் மூன்றாவது அயர்லாந்தையும் குறிக்கிறது. இந்த கொடி வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றுதான். அரண்மனையில் ராணி இருந்தால் அதன் விதானத்தில் இந்த கொடி பறக்கும்.

இங்கிலாந்து ராணியின் சவப்பெட்டி மீது போர்த்தப்பட்ட கொடியில் இவ்வளவு அர்த்தம் இருக்கா.? | History Of The Flag Covering Queen Elizabeth

ராணி அரண்மனையில் இல்லையென்றால் கொடி இறக்கப்படும். அதேபோல, ராணி பயணிக்கும் வாகனங்களிலும் இந்த கொடி இடம்பெறும். ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த கொடி அரசர் சார்லஸிடம் ஒப்படைக்கப்படும். யார்க்ஷைர் நகரத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த கொடியை உருவாக்கியுள்ளது.

12 அடி உயரமும் 6 அடி அகலமும் இந்த கொடியை கடந்த ஆண்டு மூன்று கலைஞர்கள் இணைந்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.