முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடி - நெகிழ்ந்த உக்ரைன் அதிபர்!

Narendra Modi Ukraine World
By Vidhya Senthil Aug 23, 2024 01:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

  உக்ரைன் சென்ற பிரதமர் மோடி கீவ்வில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக 3 நாள் போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்குக் கடந்த புதன்கிழமை சென்றார். போலந்து நாட்டுக்குச் சென்ற பிரதமருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலந்து அதிபருடன் ஆலோசனை நடத்தினார்.

முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடி - நெகிழ்ந்த உக்ரைன் அதிபர்! | Historic Visit Modi Meets Zelensky

பின்னர் அங்கிருந்து, ரயில் மூலமாக 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார்.அங்கு அவருக்கு உக்ரைன் அதிகாரிகள் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.மேலும் ரயில் நிலையத்தில் காத்திருந்த உக்ரைன் வாழ் இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

  உக்ரைன் 

  இதனையடுத்து மக்களுடன் பிரதமர் உரையாடினார். பின்பு செல்பி எடுத்து எடுத்துக்கொண்டனர் .இதனைத்தொடர்ந்து கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.அதன் பிறகு, கீவ் நகரில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுக் கூடத்திற்குச் சென்றார் .

முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மோடி - நெகிழ்ந்த உக்ரைன் அதிபர்! | Historic Visit Modi Meets Zelensky

அப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிரதமர் மோடியை வரவேற்றார்.     1991-ஆம் ஆண்டு உக்ரைன் நாடு உருவான பிறகு, அங்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்ற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.