இடிபாடுகளில் உயிரிழந்த மனைவி, குழந்தைகள் - கட்டிட இடிபாடுகளில் ஒதுக்கிவிட்டு தேடும் கணவர்

Turkey Syria Death Turkey Earthquake
By Thahir Feb 14, 2023 05:31 PM GMT
Report

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மனைவி மற்றும் குழந்தைகளை கணவர் தேடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாக கொண்டு அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

His wife and children died in the rubble

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் துருக்கி மற்றும் சிரியா நிலைகுலைந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது 

இதையடுத்து அதிகாலை நிகழ்ந்த இந்த கோர நிலநடுக்கத்தால் அனைத்து கட்டிடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டாகின. இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 37ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தொடர்ந்து மீட்பு பணி என்பது இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. துருக்கியில் மட்டும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,643 ஆகவும், சிரியாவில் 5,700 ஆகவும் அதிகரித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரங்களை கடந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

கண்ணீரை வரவழைக்கும் வீடியோ காட்சி 

இந்த நிலையில், ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தனது மனைவி மற்றும் தனது குழந்தைகளை தேடுகிறார்.

His wife and children died in the rubble

மீட்பு படையினர் அவர்கள் உயிரிழந்துவிட்டனர் என்று கூறிய நிலையிலும் அதை நம்பாத அந்த கணவர் இடிபாடுகளை கைகளால் தள்ளிவிட்டும், கூச்சலிட்டும் தேடினார். அவரின் அந்த செயல் அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.