இந்த நாட்டில் இந்து கோவில்களைக் கட்டுவதற்கு தடை.. பாகிஸ்தான், சீனா இல்ல - எது தெரியுமா?
ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் இந்து கோவில்களைக் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்து கோவில்
பொதுவாக பாகிஸ்தான், வங்கதேச நாடுகளிலும் இந்து மத கோவில்கள் உள்ளன. அங்கு திருவிழாக்கள், சிறப்பு வழிபாடுகள் என ஏராளமான வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் இந்து கோவில்களைக் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மாலத்தீவில் வசிக்கும் குடிமக்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
தடை
இஸ்லாமிய வழிபாட்டைத் தவிர்த்து மற்ற அனைத்து வழிபாடுகளும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளன.மொத்தமே இங்கு சுமார் 6 லட்சம் மக்கள் தான் வசிக்கிறார்கள்.இங்கு பண்டிகையைக் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இங்கு 1192 சிறிய தீவுகள் உள்ளன. மேலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அங்கு வழங்கப்படுவதில்லை.