உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இவர் இல்லாதது பேரிழப்பு - முன்னாள் வீரர்

Thahir
in கிரிக்கெட்Report this article
உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இந்த வீரர் இல்லாதது பேரிழப்பு என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக இடம் பெறாத ஜடேஜா
டி20 உலகக் கோப்பைக்கான தொடர் அடுத்த மாதம் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அந்த பட்டியலில் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவரால் இத்தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் உலகக்கோப்பை தொடரில் ஜடேஜா பங்கேற்காதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் கருத்து
இது குறித்து பேசிய அவர், அணியில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு கனமான ஒன்று. இடது கை ஆட்டக்காரர் இல்லாதது இந்தியாவுக்கு கவலைக்குரியது. இடது கை ஆட்டக்காரருக்காக தினேஷ் கார்த்திக்கை விட்டு ரிஷப் பண்ட்டை 4வது அல்லது 5-வது இடத்தில் களமிறக்குவார்கள். இது தான் உலகக்கோப்பையில் இந்திய அணி தீர்வு காணவேண்டிய விஷயங்கள். ஆனால், தற்போது சிறப்பாக ஆடக்கூடிய தருணத்தில் இந்திய அணியில் ஜடேஜா இல்லாதது அணிக்கு பேரிழப்பு' என்றார்.