2 வயது குழந்தையை விழுங்கிய நீர்யானை... - அடுத்து நடந்தது என்ன? - வெளியான அதிர்ச்சி சம்பவம்

Africa
By Nandhini Dec 16, 2022 08:08 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்பிரிக்கா, உகாண்டாவில் நீர்யானை ஒன்று ஏரியிலிருந்து வெளியேறி 2 வயது குழந்தையை விழுங்கி, பின்பு கக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2 வயது சிறுவனை விழுங்கிய நீர்யானை

உகாண்டா, கபடோரோவில் உள்ள எட்வர்ட் ஏரியின் கரையில் தனது வீட்டிற்கு அருகில் ஒரு 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, ​​பசியுடன் இருந்த நீர்யானை ஏரியிலிருந்து வெளியேறி அக்குழந்தையை விழுங்க பிடித்தது.

குழந்தையின் அழுகை குரலைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். குழந்தை பிடித்து முழுவதுமாக விழுங்கப்படுவதற்கு முன், அங்கிருந்த ஒருவர் ஓடி வந்து நீர்யானை மீது கல்லால் குத்தத் தொடங்கினார்.

அப்போது, நீர்யானை அக்குழந்தையை வாயிலிருந்து கக்கியது. அந்த குழந்தையை மீட்டு, அங்கிருந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து குழந்தை மேல் சிகிச்சைக்காக புவேரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 பேரையாவது இந்த நீர்யானைகள் கொல்வதாகவும், ஒரு அடிக்கு மேல் நீளமுள்ள தந்தங்கள் ஆபத்தான தாக்குதல் நடத்துவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

hippopotamus-swallows-2-year-old-boy-shocking-news