வீட்டு பணியாளர்களை விட.. நாய்க்கு அதிக செலவு - ஹிந்துஜா குடும்பத்திற்கு சிறை!
ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஜா குடும்பம்
பிரிட்டனின் மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பம் ஹிந்துஜா குடும்பம். இவர்களுடைய சொத்து மதிப்பு 47 பில்லியன் டாலர்(3,92,820 கோடி ரூபாய்). இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர்.
லண்டனில் ரியல் எஸ்டேட், கப்பல் போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், ஹிந்துஜா குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தில் உள்ள வீட்டில் இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட பணியாளர்களை துன்புறுத்தியதாகவும்,
சிறை தண்டனை
பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு, அவர்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. மேலும், வீட்டுப் பணியாளர்களிடம் 15 முதல் 18 மணி மணி நேரம் வரை வேலை வாங்கிவிட்டு, ஒரு நாளைக்கு ரூ.667 மட்டுமே ஊதியம் கொடுத்ததாகவும்,
ஆனால், வளர்த்த நாய்க்கு நாளொன்றுக்கு ரூ.1,600 வரையும் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் ஹிந்துஜா ஆகியோருக்கு தலா நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனையும்,
அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நர்மதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.