"இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்று 2 குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்க்க வேண்டும்" - சர்ச்சையில் பெண் சாமியார்
விஸ்வ இந்து பரிட்சுத் அமைப்பின் பெண்கள் பிரிவான துர்கா வாகினையை நிறுவிய பெண் சாமியாரான சாத்வி ரிதாம்பரா பல்வேறு சர்ச்சை பேச்சுகளால் அறியப்படுபவர் ஆவார்.
இந்நிலையில், உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்று 2 குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்க்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
“இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொண்டிருப்பவர்களே டெல்லி ஜஹாங்கீர்புரி அனுமன் ஜெயந்தியில் வன்முறை ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற அரசியல் பயங்கரவாதம் மூலமாக இந்து சமுதாயத்தை பிளவுப்படுத்த நினைப்பவர்கள் தவிடுபொடியாக்கப்படுவார்கள்.

இந்து பெண்கள் ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகளை பெற்று கொள்ளவேண்டும், அவற்றில் 2 குழந்தைகளை நாட்டிற்காக பணியாற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்க்க வேண்டும்” என்று பெண் சாமியாரான சாத்வி ரிதாம்பரா கூறியுள்ளார்.
அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.