பார்ப்பனர் அரசியல் செல்வாக்கு? கோடிகளில் உண்டியல் வசூல்???

Tamil nadu Cuddalore
By Sumathi Jun 12, 2022 04:41 PM GMT
Report

சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்துவருகின்றனர்.

நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையால் உருவாக்கப்பட்ட அதிகாரிகள் குழு ஒன்று 7, 8 தேதிகளில் ஆய்வு செய்யவிருப்பதாகக் கடந்த மாதம் 26-ம் தேதி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு, 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டுவருவதாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்குழுவின் ஆய்வுக்கு ஆட்சேபம் தெரிவித்தும்

சர்ச்சையும் பின்னணியும்

தீட்சிதர்கள் சார்பில் அறநிலையத்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுவதால்

இந்தக் கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தீட்சிதர்களின் கடிதத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், பல்வேறு தீர்ப்புகளில் சிதம்பரம் நடராஜர் கோயில், பொதுக் கோயில் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் நடராஜர் கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்க, வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட கோயில் அலுவல் பணிகளை விசாரிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.

கொரோனா தொற்றுக்கு முன்பு கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் காரணமாக அது தடைசெய்யப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தடை உட்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, நடராஜர் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏற விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில் அரசு எந்த வகையிலும் தலையிடுவதில்லை.

அதேவேளையில் இந்தக் கோயில் பொதுக்கோயில் என்பதால் கோயிலின் வரவு, செலவு கணக்கு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரிக்கக் குழு அமைக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு.

ஆகையால், வரும் 7, 8-ம் தேதிகளில் கோயிலுக்கு ஆய்வுக்குழுவை அனுப்புவதற்கான நடவடிக்கையைத் திரும்பப் பெறுவதற்கான வழி இல்லை.

ஆய்வுப் பணிகளை முடிக்க அதிகாரிகள் குழுவுடன் தீட்சிதர்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.