இந்து - முஸ்லிம் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது - ராகுல் காந்தி ஆவேசம்

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Dec 24, 2022 07:58 PM GMT
Report

நூறு நாட்களாக மேலாக ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை நேற்று டெல்லி வந்தடைந்தது,அப்போது டெல்லி செங்கோட்டை பகுதியில் பேசிய ராகுல் காந்தி

 அதானி அரசு

நாட்டில் தற்போது இருப்பது நரேந்திர மோடி அரசு அல்ல. இது அம்பானி - அதானி அரசு. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசு அல்ல. இந்தியாவில் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

அதற்கு இதுவரை மத்திய அரசு தீர்வு காணவில்லை. நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே இந்து முஸ்லிம் விவகாரம் எழுப்பப்படுகிறது.

பட்டம் படித்த இளைஞர்கள் பலர் இன்று பகோடா விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலை இல்லை

எங்கள் யாத்திரையில் நாய் வந்தது

நான் மேற்கொண்ட இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் எங்களோடு நாய்கூட வந்தது. ஆனால், ஒருவரும் நாயை கொல்லவில்லை. பசு, எருது, பன்றி என பல்வேறு விலங்குகள் வந்தன. இந்த யாத்திரை இந்தியாவின் யாத்திரையாக இருக்கிறது. இங்கே வெறுப்புக்கு இடமே இல்லை. வன்முறைக்கு இடமே இல்லை எனக் கூறிய ராகுல் கொரோனாவை காரணம் காட்டி ககாட்டி யாத்திரையை நிறுத்த முயல்வதாக கூறினார்.