இந்து மக்கள் கட்சியிடம் வசமாக சிக்கிய ரௌடி பேபி சூர்யா - மதுரையில் ஓர் அதிரடி ஆக்‌ஷன்

rowdybabysurya ரௌடி பேபி சூர்யா
By Petchi Avudaiappan Oct 23, 2021 10:09 PM GMT
Report

பிரபல யூடியுப்பர்களான ரௌடி பேபி சூர்யா, சிக்கா சிக்கந்தர ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் , கொரோனா காலம் என்பதால் தற்போது இணையதளம் மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில், அதனை கெடுக்கின்ற வகையிலும், பெண்களை முக சுழிக்க வைக்கும் வகையிலும்,ஆபாசமாக தமிழ் சமுதாய நாகரீகத்தை சீரழிக்கும் வகையில் யூடியூப் மற்றும் இணையதளத்தில் காணொலி மூலம் வீிடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்து மக்கள் கட்சியிடம் வசமாக சிக்கிய ரௌடி பேபி சூர்யா - மதுரையில் ஓர் அதிரடி ஆக்‌ஷன் | Hindu Makkal Katchi Gives Complaint On Rowdy Baby

ஒழுக்கேடான வாழ்கை வாழ்ந்துவரும் ரௌடி பேபி சூர்யா,சிக்கா (எ) சிக்கந்தர் ஆகியோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ரவுடிபேபி, சிக்கா பேசிய அருவருக்கதக்க வீடியோக்களை தடை செய்ய வேண்டும்.

ரௌடி பேபி, சிக்கா இணையதளங்களை முடக்க வேண்டும். தமிழக கலாசாரம், பண்பாட்டை சீரழிக்கும் வகையில் வியாபார நோக்கத்தோடு வேண்டுமென்று திட்டமிட்டு சமுதாய சீர்கேட்டை உண்டாக்கும் ரௌடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் விரைவில் வலுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.