ஒரு குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய்: அர்ஜுன் சம்பத்தின் மிரள வைக்கும் தேர்தல் அறிக்கை
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இந்து மக்கள் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசியவர், திமுக தேர்தல் அறிக்கை மூலம் கபட நாடகம் போடுகிறது. எங்களுடைய முக்கிய குறிக்கோள் இந்துக்களின் வாக்குகளை ஒன்றிணைப்பது தான் என தெரிவித்தார்.
பின்னர் இந்து மக்கள் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு. ஒரு குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரராக்கும் திட்டம். மெரினா கடற்கரைக்கு தமிழர் கடற்கரை என்ற பெயர் மாற்றம் செய்தல். ராமேஸ்வரம் புனிததீவாக அறிவித்தல். உள்ளிட்ட அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.