இந்து என்பது மதம் அல்ல தேசம்.. ராஜ ராஜ சோழன் இந்து தான் - ஹெச்.ராஜா

Thol. Thirumavalavan BJP Seeman H Raja
By Thahir Oct 05, 2022 12:11 PM GMT
Report

இந்து என்பது மதம் அல்ல தேசம் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, “சட்டப்படி தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவது பேசுவது கிரிமினல் குற்றமாகும்.

ஹெச்.ராஜா ஆவேசம்  

பயங்கரவாதத்திற்கு ஆதரவாக, பயங்கரவாதிகளின் நண்பனாக இருக்கின்ற திருமாவளவன், சீமான் போன்றோர் அறிவித்துள்ள மனிதசங்கிலிக்கு தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்த விரும்புகிறேன்.

இந்நாட்டின் எதிரிகள் திருமாவளவனும் சீமானும். இதற்கு முழு ஆதாரம் என்னிடம் உள்ளது. ஸ்டாலின் நல்லவர். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கொம்பு சீவி விடுவார்கள்.

ஸ்டாலின் தலையை சிலுப்பினால் 1991 ல் நடந்தது இப்பொழுதும் நடக்கலாம். தமிழகத்தின் அரசியல் களத்திலிருந்து சீமான் மற்றும் திருமாவளவனை வேரோடு வேறாக தூக்கி எரியும் வரை நான் ஓயமாட்டேன்.

இந்து என்பது மதம் அல்ல தேசம்.. ராஜ ராஜ சோழன் இந்து தான் - ஹெச்.ராஜா | Hindu Is A Nation Not A Religion H Raja

ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றிவிட்டோமா? ராஜ ராஜ சோழன் கட்டிய ரெண்டு சர்ச் ரெண்டு மாஸ்க் எங்க இருக்குனு சொல்லிட்டா போதும். இந்து என்பது மதம் அல்ல. இந்து என்பது தேசம். அதனால் தான் சட்டம் இந்துவை நேர்மறையாகச் சொல்லவில்லை.

இந்த மண்ணில் பிறந்த மதங்கள் எல்லாம் இந்து மதங்கள் என்று சொல்கிறது. இங்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த ஆதிசங்கரர் 72 வழிபாட்டு முறைகளாக இருந்ததை 6 முறைகளாக ஒருங்கிணைத்தார்.

எனவே சிவன் வேறு சைவம் வேறு இந்து வேறு இல்லை. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. எனவே ராஜ ராஜ சோழன் இந்து தான்.

இந்தியச் சட்டத்தின் படியும் அவர் இந்து தான் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிசங்கரர் உருவாக்கியதன் படியும் இந்து தான்” எனக் கூறினார்.