இந்தி கற்பது அதிக மக்களுடன் இணைய உதவும் : தமிழக ஆளுநர் ரவி
நாட்டிலேயே அதிக மக்கள் இந்தி பேசுவதால், அதைக் கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் கூறியுள்ளார்.
இந்தி மொழி சர்ச்சை
தமிழக ஆளுநர் தமிழ் , தமிழ்நாடு சர்ச்சைதான் தற்போதைய அரசியலில் பேசு பொருளாக உள்ளது, இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது அதிகமான மக்களுடன் தொடர்பு கொள்ள உதவும் என தமிழ்நாடு ஆளுநர் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தி கற்பது நன்மை
மேலும், நாட்டிலேயே அதிக மக்கள் இந்தி பேசுவதால், அதைக் கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். நாம் இன்னும் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது ஒரு நன்மை.
மேலும் பலருடன் நாம் தொடர்புகொள்ள எளிதாக முடியும். எனவே, முடிந்தவரை பல மொழிகளைக் நாம் கற்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார்.