’’இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது'’ - கமல்ஹாசன்
தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து உள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக நிலையில், பார்சல் குறித்து சோமேட்டோ சாட் பாக்சில் புகார் தெரிவிக்கலாம்.
அதற்குரிய ஆதாரத்தை நாம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் பணத்தை ரீபண்ட் செய்வார்கள் அல்லது ஆர்டர் செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை மீண்டும் கொடுப்பார்கள்.
அந்த வகையில்,விகாஷ் சோமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் சாட் பாக்சில் புகார் தெரிவிக்க, அவருடன் பேசிய நபர் ரீபண்ட் கொடுக்க மறுத்துள்ளார்.
நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என சோமேட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு விகாஷ் தமிழ்நாட்டில் சேவை வழங்கும்போது தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த சோமேட்டோ அதிகாரி, இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று பதில் அளித்துள்ளார்.
இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், பலரும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில்:
இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.
— Kamal Haasan (@ikamalhaasan) October 20, 2021
இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை என்று பதிவிட்டுள்ளார்.