மதுரை கள்ளழகர் கோவில் நுழைவு வாயிலில் தமிழ் பெயர் நீக்கப்பட்டதா? அரசு விளக்கம்
மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த கோயில் பெயர் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் கோயில் பெயர் எழுதப்பட்டிருந்தது.
தற்போது பழைய எழுத்துகள் அகற்றப்பட்டு, புதிய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் மொழியில் இருந்த பெயர் நீக்கப்பட்டதாக தகவல் பரவியது.

இதனைத்தொடர்ந்து, கோயில் நுழைவு வாயிலில் தமிழ் மொழி நீக்கப்படவில்லை என்றும், இது பொய்யான தகவல் என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும்.
சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.
செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
போலியான செய்தியை பரப்பிய @sunnewstamil எனும் பொய் செய்தி சேனலுக்கு வன்மையான கண்டனம் மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக சன் நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும். சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர். மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எனவே, சன் நியூஸ் வெளியிட்டுள்ள இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது. பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். போலியான சன் நியூஸ் செய்தியுடன், தற்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. பின்குறிப்பு: சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும். @CMOTamilnadu | @TVKVijayHQ
— TVK Ramesh (@RameshOffcl) October 6, 2026
பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய சன் நியூஸ் செய்தி சேனலின் இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.