ஆங்கிலத்திற்கு மாற்று மொழி இந்தி மொழிதான் - அமித்ஷா பேச்சு

hindi amitsha alternativelanguage
By Irumporai Apr 08, 2022 03:04 AM GMT
Report

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா .

இந்தி மொழியானது மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி பற்றிய தொகுப்புகள் எல்லாம் இந்தி மொழியில் உருவாக்கப்படுள்ளது. வட மாநிலங்களில் 22,000 அதிகமான இந்தி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்திய பள்ளியில் பயிலும் 9 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் அதே போல் இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.

மேலும், இந்தி மொழியினை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என கூறிய அமித்ஷா .

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என அமித்ஷா கூறினார்.