ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

covid19 actress Katrina Kaif bollywood
By Jon Apr 07, 2021 09:53 AM GMT
Report

ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃபுக்கு காரோண தோற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா தோற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்‌ஷய் குமார் அவரது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் எடுத்துக்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தோற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன்.

கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று அதில் தெரிவித்துள்ளார்.


Gallery