தேசத்தின் பெயரை சொல்லி தப்பிக்க பார்க்கிறார்களா ? - அதானிக்கு பதில் கொடுத்த ஹிண்டென்பெர்க்
தேசத்தின் பெயரை சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள் என்று அதானி அறிக்கைக்கு ஹிண்டென்பெர்க் பதில் அளித்துள்ளது.
அதானி முறைக்கேடு
அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் பெரும் வளர்ச்சி பெற்று உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அதானி குழுமத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு அவர்கள் செய்த மோசடியே காரணம் என கூறி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திட்டமிட்ட தாக்குதல்
இந்த சம்பவத்தை தொடர்ந்து அதானி பங்குகள் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் இன்று அதானி குழுமம் பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியா மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என கூறியிருந்தது.
மோசடி செய்யாதிங்க
இந்நிலையில் அதானி குழும அறிக்கைக்கு பதில் அளித்துள்ள ஹிண்டென்பெர்க் நிறுவனம் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் வல்லரசு. தேசியம் என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி குழுமம் தப்பிக்க நினைக்கிறது.
அதானி குழுமம் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மாறியுள்ளது என கூறியுள்ளது.
அதானி குழும முறைகேடு குறித்த செபி விசாரணை தேவை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.