ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி..கடும் சரிவில் அதானி குழுமம் - ரூ.53,000 கோடி இழப்பு!

India Gautam Adani
By Swetha Aug 12, 2024 07:00 AM GMT
Report

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

எதிரொலி..

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் போலி நிறுவனங்களை உருவாக்கி பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி..கடும் சரிவில் அதானி குழுமம் - ரூ.53,000 கோடி இழப்பு! | Hindenburg Echoes Adani Stock Market Downfall

தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் அதானி குழுமம் முறைகேடு குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டது. இதில் அந்நிறுவனம் உருவாக்கிய போலி நிறுவனங்களில், செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பல ஆயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார் என்றும்,

இந்தியாவில் ஒரு பெரிய சம்பவம் நடக்கபோகிறது - எச்சரிக்கை விடுத்த முன்னனி ஆய்வு நிறுவனம்!

இந்தியாவில் ஒரு பெரிய சம்பவம் நடக்கபோகிறது - எச்சரிக்கை விடுத்த முன்னனி ஆய்வு நிறுவனம்!

அதானி குழுமம்

இதன் காரணமாகவே அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் கூறிவந்தனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி..கடும் சரிவில் அதானி குழுமம் - ரூ.53,000 கோடி இழப்பு! | Hindenburg Echoes Adani Stock Market Downfall

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் கடுமையாக விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. இதனால், அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 % சரிந்து ரூ.1,656க்கு வர்த்தகமாகி வருகிறது.

அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் விலை 5% ஆகவும் , அதானி பவர் விலை 4 சதவிகிதமாகவும் சரிந்துள்ளது. அதேபோல் அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூஷன், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 3% சதவீதம் வரை சரிந்துள்ளது.