கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் இவ்வுளவு உயிரிழப்பா ? - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சீனா

COVID-19 China
By Irumporai Jan 14, 2023 12:23 PM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

பல மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் அதிகரித்துள்ளது.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா

ஆனால் பாதிப்பு விவரங்களை சீன அரசு வெளியிடாமல் மறைத்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் 60,000 பேர் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கொரோனா பாதிப்பால் சீனாவில் 60,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் இவ்வுளவு உயிரிழப்பா ? - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சீனா | Hina Covid Peak One Month Death

ஒரு மாதத்தில் 60,000 பேர்  

சீனாவில் கொரோனா விதிகளை தளர்த்தியதற்கு பிறகு ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தோற்று காரணமாக ஏற்பட்ட நுரையீரல் செயலிழப்பால் 5,503 பேர் உற்பட 60,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.